Thursday, December 17, 2015

கோபுர பொம்மைகள்

கோபுர பொம்மைகள்
கோவில் கோபுரத்தில் பல திருவுருவங்கள் காணப்படுவதைப் பார்க்கிறோம்.பொம்மைகள் நம் விருப்பபடி வைத்துவிட முடியாது.இன்ன இன்ன இடத்தில் இன்ன இன்ன தெய்வங்களின் உருவங்களை வைக்க வேண்டும் என்ற விதி உண்டு.கோபுரத்தின் அடிப்பாகத்தில் பிரும்ம தேவர் சம்பந்தப்பட்ட பொம்மைகளும் ,நடு பாகத்தில் மகா விஷ்ணு சம்பந்தப்பட்டு பொம்மைகளும்,மேல் பாகத்தில் சிவ பெருமான் சம்பந்தப்பட்ட பொம்மைகளும் இடம் பெற வேண்டும்.
கோபுரத்தில் பக்கப் பகுதிகளில் தேவதைகள் ,ரிஷிகள் , பக்தர்கள்,பூத்கான்ன்களின் உருவங்கள் அமைக்க வேண்டும்.
இந்த உருவப் பொம்மைகளைச் செய்ய சில இலக்கண விதிகள் உண்டு. பிரதிமாலக்ஷணம் என்று பெயர்.
அந்தத் தெய்வ உருவங்களின் முகங்களின் அளவை விட உடல் பகுதி பத்து மடங்கு இருக்க வேண்டும்.மற்ற தேவதைகளுக்கு முகத்தை விட ஒன்பது மடங்கு இருக்க வேண்டும்.மனித உருவங்களுக்கு முகத்தைவிட எட்டு மடங்கும்,வேதாளம் ,அசுர கணங்களுக்கு முகத்தைப் பொருத்தவரை துவார பாலகர்,பூதகணங்களின் கண்கள் உக்கிர திருஷ்டியுடனும்,கடவுள் உருவங்களின் கண்கள் அனுக்கிரக திருஷ்டியுடனும் இருக்க வேண்டும்.
கோபுரத்தில் தேவர்கள்,மிருகங்கள்,பறைவைகள் என அனைத்து ஜீவராசிகளின் உருவங்களும் இடம் பெற்று இருக்கும்.இவை சமத்துவதைக் குறிக்கின்றன.அனைத்து உருவங்களிலும் இறைவன் இருப்பதை இவை உணர்த்துகின்றன.

No comments:

Post a Comment