Monday, February 29, 2016

சூரியனில் இருந்து வெளிவரும் ஒளி

சூரியனில் இருந்து வெளிவரும் ஒளியானது 8
நிமிடத்தில் பூமியை அடைகிறது.
நமது 2
கண்களுக்குள் உள்ள கண்ணின் பாவை வழியாக
( அதிகாலை சூரிய ஒளியில் அடங்கியுள்ள
நீலநிற ஒளிக்கதிரின் 470nm ஒளி
அலையானது ) ஊடுருவிச் செல்கிறது.
அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
வருகின்ற சூரிய ஒளிக் கதிர்கள்
மூலையின் நடுப்பகுதியில் உள்ள பீனியல்
சுரப்பியை இயங்கச் செய்கிறது. சூரிய ஒளிக்
கதிர்கள் உடல்மீது படும்படியும், கண்களுக்கு
நீலநிற வானத்தின் ஒளிக்கதிர்கள்
தெரியும்படியான நடைப்பயிற்சி
செய்யும்போதுதான் பீனியல் சுரப்பி
இயங்குகிறது. பீனியல் சுரப்பியிலிருந்து
மெலடினின் என்ற திரவம் சுரக்கிறது. காலை
6.00 மணிக்கு பிறகு பீனியல் சுரப்பியிலிருந்து
மெலடினின் என்ற திரவம் சுரப்பது நின்று
விடுகிறது.
அதிகாலையில் முதல் முதலாக நமது உடலில்
சுரக்கும் இந்த திரவமே மூலைக்கும்
இருதயத்திற்கும், மூலைக்கும்
தண்டுவடத்திற்கும், மூலைக்கும்
சிறுநீரகத்திற்கும் தொடர்பை ஏற்படுத்துகிறது
. மின்சாரம் மற்றும் மின்காந்த ஆற்றல்களை
உடல் முழுவதும் உள்ள செல்களுக்கும்,
நரம்பு இணைப்புகளுக்கும் கிடைக்கச்
செய்கிறது. மெலடினின் என்ற திரவமே 24
மணி நேரமும் உடலில் நடைபெறும் அனைத்து
செயல்களையும் நடுநிலைப்படுத்துகிறது.
தோலின் நுனிப் பகுதியின் உணர்வு
அலைகளை மூலையானது அறிந்து கொள்ள
காரணமாக உள்ளது. மனிதர்கள் ஓய்வாக
உறங்கும்போது“இரவு 9.00 மணி முதல்
10.00 மணிக்குள்”உடலானது தன்னைத்தானே
சரிசெய்து கொள்ள மெலடினின் என்ற திரவமே
காரணமாக உள்ளது. இந்த நேரத்தில்
(உறங்காமல் கண்கள் திறந்திருப்பதும், 5
WATTS க்கும் அதிகமான வெளிச்சம் உடல்மீது
படும்படியாக இருப்பது) மெலடினின் திரவம்
உடலினை நடுநிலைப்படுத்த
தடையாகின்றது.
தினசரி உடல் ஆரோக்கியம் அனைத்திற்கும்
மெலடினின் திரவ உற்பத்தியே முதல்
காரணமாக உள்ளது. இதனை நமது சித்தர்
பெருமக்கள் உணர்ந்து உருவாக்கியதுதான்
“தினசரி வாழ்க்கை முறைகள்”என்பது மறுக்க
முடியாத உண்மையாகும்.
தனிமனிதர் உடல் ஆரோக்கியம் என்பது
அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
சூரிய ஒளியில் நடைப்பயிற்சி
செய்யும்போதும், இரவு 9.00 மணிக்கு
முன்பே உறங்குவதால் 50% அதிகமாக
மெலடினின் திரவத்தினால் உருவாக்கப்படுவதாகும்.
எட்டும் , இரண்டும் பத்தடா என்றால் 8+ 2 =10
இல்லை , தமிழில் இதை
அ + உ = ய இதுவும் இல்லை .
அதாவது
அகாரத்தையும் உகாரத்தையும் கெட்டியாகப்
பிடித்துக் கொள் என்று அர்த்தம் .
சூரிய கலையில் மூச்சு நடக்கும்போது அதிக
ஆற்றல் உண்டாகி சக்தி பெருகும் . எனவே
அறிவு வளரும் . அதே மூச்சு தலையில்
உள்ள புருவ மத்தியில் ஏறிச் சென்று
உச்சியில் நடன மாடினால் ஞானம் பிறக்கும் .
இதில் நாடு நிலை என்று சொல்லப் பட்டது
முதுகுத் தண்டின் மத்தியில் உள்ள
வெற்றிடத்தைக் குறிக்கும் , அதில் பிராண
சக்தி , மின்சார சக்தி இயக்க சக்தி , காந்த சக்தி
, இச்சா சக்தி போன்ற சக்தி ஓட்டங்கள் இதில்
ஓடுகிறது
அண்டத்தையும் பிண்டத்தையும் அன்பு
இணைக்கிறது
அ என்றால் அண்டம் அதாவது சிற்றண்டம்
ன் என்றால் இணைக்கும் சக்தி
பு என்றால் புவி அல்லது பூமி
ன அல்லது நா என்றால் நாதம் இங்கே வாய்வு
அல்லது காற்று ஆகும்
ன் என்ற சப்தத்துடம் அல்லது சக்தியுடன்
காற்று இயங்குகிறது .
இதுவும் ஒரு கல்வி முறையைப் போன்றது
.இந்த மண்ணில் தோன்றிய உயிர்களில் மனித
இனம் உயர்வான ஓன்று .
இறைவனின் சாயல்
கொண்டது நமது உடம்பு , அறியும் திறன்
அதிகம் உள்ள இனம் மனித இனம் .கொஞ்சம்
சீர்தூக்கிப் பாருங்கள் அன்புகளே எது
வேண்டும் என்று .நமது அறிவு எது நோக்கிச்
செல்ல வேண்டும் என்று .
நமது இயக்கங்களுக்கு முக்கிய காரணம்
பிசுட்டரி சுரப்பியும் பீனியல் சுரப்பியும்
ஆகும் .நமது மூச்சு 2 1/2 நாளிகை வலது
நாசியிலும் 2 1/2 நாளிகை இடது நாசியிலும்
ஓடும் .ஒவ்வொரு நாள் துவங்கும்போது எந்த
நாடியில் கலை நடக்க வேண்டும் என்று
உள்ளது , இதை மாற்றிய யோகிகளுக்கு
சித்திக்கும் வல்லமை பெற்றது .
இது ரகசியமாக பிரணவ உச்சியின் வலது
பக்கத்தில் சந்திரனையும் இடது பக்கம்
சூரியனையும் மாற்றி ,தண்டத்தால் செய்யும்
முறை ஆகும் சூரிய சந்திரர்களை மாற்றி
மாற்றி ஒரு வருடம் தொடர்ந்து விடாமல்
செய்து வர வேண்டும் .மரணத்தை வென்றபின்
அழகு பொருந்திய இந்த அணிமாவானது
சித்திக்கும் .
பின்பு இந்த சாதனையுடன் திரிபுர
சக்திகளுடன் சேர்ந்து செய்ய வேண்டும்,ஐந்து
வருட பயிற்சியால் ஞான தத்துவங்கள் தானாக
வந்து சேரும் , தொடர்ந்து இதையே
பரிபாலித்துக் கொண்டு வந்தால் லகிமாவும்
அதன் சக்தியைக் கொடுக்கும் .
பிரகாசத்தைக் கண்ட ஞானிகள் எல்லோராலும்
காணக் கூடிய மணிபூரக ஸ்தானத்தை உந்திக்
கமலத்தில் கண்டு ,அந்த பிரகாச சக்தியை
எல்லா திக்கிற்கும் பரவச் செய்து
பரவசமடைவர் .அந்த ஒளி சதா காலமும்
பிரகாசித்து ஒன்றைக் கலக்கும் வரை சாதனை
தொடர வேண்டும் .அப்பியாசிக்கு ஒரு வருட
காலத்தில் சித்திக்கும் . மகா சக்தியானவள்
வெளிப்பட்டு ஒன்றாய் கலந்து விடுவாள்.இது
அப்பியாசியின் இஷ்டம்போல் நடப்பதற்கு
உதவும் மகிமா ஆகும
ஓம் என்ற பிரணவம் இரு பிரிவாக பிரிந்து இரு
செயல்களாக மாறி
ஓர் நிலையில் உள்ள இரு உடம்பில்
செயல்படுகிறது. கணவன், மனைவி
கூட நினைக்கும் போது. மனது என்ற
விசையின் மூலம் வெளிப்படுகிறது
அதை நாம் காமன் விடும் பானம் என்கிறோம்.
பின் இரு சக்தி ஓட்டங்களாக பிரிந்து
பெண்ணின் சுரோனிதத்திலும், ஆணின்
விந்துவிலும் செயல் படுகிறது. ஆண், பெண்
சேர்கை நாத விந்து சேர்க்கையாக மாறுகிறது
பின்னால் இந்த நாத விந்து சேர்கை
பிரணவமாக மாறி செயல் புரிய ஆரம்பிக்கும்.
அதனால்தான் திருமணத்தை வை போகம்
என்கிறோம். கல்யாணத்தை எல்லோரும்
ஆசிர்வதிக்க அழைக்கிறோம். கலவியின் போது
கருவறைக்குள் செல்ல
அவ்விடத்தில் உள்ள பூத கணங்கள்
உதவுகின்றன, அதன் பொருட்டு நாம் பூத
கணங்களை வணங்குகிறோம். நாத, விந்து
சக்தி பெற்று மரு
என்ற புள்ளியாக அல்லது செல்களாக மாறும்.
பெண்ணின் மாதவிடாய்
வெளியேறாமல் பிண்டமாக உருவெடுக்கும்,
பின்னர் செல்ல்களாக மாறும் பின் ஒவ்வொரு
வாய்வாக உள்ளை செல்லும் பூத
கணங்கள்உதவி புரியும் முதலில் சென்ற
வாய்வு பிராணன் என்ற
நிலையில் உயிராக மாறும். இந்த வாய்வுதான்
இறக்கும் போது கடைசியில் வெளியேறும்.
மூலாதாரத்தை முதலில் உருவாக்கி மற்ற
வாய்வுக்கள் செயல் பட கணங்கள் உதவி
செய்யும். கணங்களின்
அதிபதி கணபதி என்ற விநாயகர்
மூலாதாரத்தில் இருந்து செயல்
படுகிறார். பிள்ளை யார் என்று அவர்
தீர்மானிக்கிறார். ஆணா பெண்ணா
என்று மூலாதாரக் கணபதி தீர்மானிக்கிறார்.
அவரை பிள்ளையார்
என்றும் மூலக் கடவுள் என்றும், சிவனின்
முதல் மகன் என்றும் பார்க்கிறோம். பிரபஞ்ச
அணுவின் சக்தியை எடுத்து பிள்ளையாக
உருவகம் பிடித்து கொடுக்கிறார். தாயின்
பத்து
மாத வெளியேற்றப்படாத மாதவிடாய் என்ற
தூய்மை தான் நம் உடல்.
பிள்ளை யார் என்ற வினாவிற்கு தாய்மையான
பெண் தனது படுக்கும் முறை கையை
வைத்து எழும் முறை போன்ற செயல்களால்
வெளிப்
படுத்துவாள் பத்து மாதம் வரை
மூலாதாரத்தில் இருந்து தொப்பிள்
கொடி மூலம் சக்தியை கொடுத்து
குழந்தையை காக்கிறார்.
கருவறையில்
இருந்து
வெளிவந்த குழந்தையை பச்சை மண்
என்கிறோம். காரணம் குயவன் களி மண்ணை
கொண்டு பானை செய்து வைத்தவுடன்
தொட்டுப் பார்த்தல் விரல் பதியும் அதே போல்
பிறந்த குழந்தையும் மிக மென்மையாக
இருக்கும். சிசு இந்த உலகில்
பிறக்கும்போது வானில் அதற்குரிய
நட்சத்திரம் தோன்றும
பிரம ஸ்தானத்தில் ஒளியை சாதகர்கள்
அனைவரும் காணலாம் .
வித்தியார்த்தி
முதற்கொண்டு சதா பயிர்ச்சி எடுக்கும்
சாதகன் வரை ஒளியை காண்கின்றனர் , பல
வண்ணங்களில் தோன்றும் ஒளியானது
ஒவ்வொரு பயிற்சியிலும் மாறும் ,கரு
வண்ணம் முதல் கரு நீலம், நீலம்
வெளிர் நீலம் ,கரும் பச்சை , அடர்பச்சை ,
பச்சை , வெளிர் பச்சை வரும் பின்பு பச்சை
கலந்த அடர் மஞ்சள் , சிகப்பு கலந்த மஞ்சள் ,
மஞ்சள் நிறங்கள் காணும் , அதன் பிறகே
வெள்ளை நிறம் காணும் . இவை வருவதற்குள்
உடம்பில் நிறைய மாற்றங்கள் வரும் ,அதற்க்கு
அறிகுறியாக ஒவ்வொரு நோய்கள் தோன்றி
சாதகனை சோதிக்கும் , இறைவனே கதி என்று
இருப்போரன்றி மற்றவர்கள் பின் வாங்கிச்
செல்வர் ,அதற்குள் சில சக்திகள்
கிடைத்திருக்கும் அதை வைத்துக் கொண்டு
உலகியலில் இருந்து மாண்டு போவர் ,
இருப்பினும் அவர் செய்த சாதனை மட்டும்
அடுத்த பிறவிக்கும் வந்து அவரை கரை
சேர்க்கும் ,
இப்போ கிரிமா அடைவதைப் பாப்போம்
பிரம ஸ்தானத்தில் உண்டாகும் ஒளி தோன்றி
மறையும் தன்மை உடையது
வைராக்கியத்தால் அதைப் பிடித்து வைத்து
சதா காலமும் அங்கே நிலைத்து இருக்கும்படி
செய்ய வேண்டும் . உலகத் தோற்றத்தை
இருந்த படியே காணலாம் .வெளி சக்திகள்
எல்லாம் ஓன்று கூடி பூத சக்தியாக மாறி
சரீரத்தில் நிலை கொண்டு இருக்கும்
சாவை வென்ற பின் இது கிடைக்கும் இதை
கிரிமா என்றனர
பிரிதிவி , சரீரத்தில் உள்ள மாமிசம் எலும்பு
நரம்பு, குடல் வயிறு இவற்றிலும் . நீர் , வாய்
இரத்தம் குடலின் உட்பகுதிலும் ,அக்கினி இரு
நேந்திரங்களையும் மார்பின் இடப் பக்கம் இதய
கமலத்திற்கு மேல் இருந்து எல்லா
இடங்களிலும் வியாபித்து இருக்கும் , வாய்வு
சிரசு நுரையீரல் பெருங்குடல் போன்ற
இடங்களிலும் ஆகாயம் இரு காதுகளிலும்
கண்ணுக்கு ஒளியை கொடுத்ததும் சிரசின்
தென் மூலையில் அடியில் பொய் , மெய் வாய்
கண் மூக்கு செவிகளை இயக்கும்.
உருண்டை வடிவமான இப்புவியில் மண்ணின்
உள்ளேயும் ( உட்புறம் ) வெளியே யும் இந்த
ஐம் பூதங்களும் இயங்கிக் கொண்டு இருக்கும்
வெளி உலகில் கோடான கோடி பரம அணுக்கள்
வாழ்ந்து கொண்டு இருக்கின்றன ,உடலுக்கும்
உலகுக்கும் பாலமாக இருப்பது காற்று
மண்டலத்தில் உள்ள வாய்வு ஆகும் .இதுவே
சங்கு சக்கரம் எனப்படும் .
அக்கினியில் சம்பந்தப் பட்ட பரமணுவானது
சக்கரத்தின் உருவைப் பெற்றும்,ஆகாயத்தில்
கலந்து சக்தி பீடமாக வெளிப்படும் .
வாயுவில் சம்பந்தப் பட்ட அணுவானது
தட்டையான பூமியில் பட்டு உருண்டு மேல்
எழும்பி சங்காக வெளிப்பட்டு ,சங்கின்
நாதத்தை வெளிப்படுத்தும் ..
மனிதர்களில்
மூக்கின் வழியே சந்திர சூரியர்களாகவும்
பரத்தில் சூரியனும் சந்திரனுமாக இருந்து
பிரவர்த்திக் கொண்டு வருகிறார்கள
ஒதாக் கல்வியா ஓதும் கல்வியா என்று
ஓடும் கல்வியா உதவும் கல்வியா என்று
சித்தர்கள் சொல்லும் 8, 2 இதற்கு பல
விளக்கங்கள் உள்ளது .

No comments:

Post a Comment