Thursday, May 5, 2016

அக்னியின் தோற்றம்

அக்னியின் தோற்றம்
ஆயிரம் நாக்குகள் கொண்ட செந்நிறமுடையவன் அக்னி தேவன். யாகங்களில் இடப்படும் ஆகுதிப் பொருட்களை தேவாதி தேவர்களுக்கு எடுத்துச் செல்பவர் அக்னி தேவன் என்கிறது வேதம். அதனால் அக்னி தேவனுக்கு புரோகிதன் என்ற தகுதியும் உண்டு. இந்த அக்னி தேவன் மூன்று வகையான உருவமாகக் காணப்படுகிறான். நெருப்பு, மின்னல், சூரியன் என்பவை ஆகும்.
அக்னியால் கூறப்பட்ட பல புராணங்களின் தொகுப்பிற்கு அக்னியின் பெயர் வைக்கப்பட்டு அக்னி புராணம் என்று அழைக்கப்படுகிறது. தேவர்களின் புரோகிதன் என்று ரிக் வேதம் குறிப்பிடப்படுகிறது.
அக்னியின் தோற்றத்தை விளக்குகிறது வேதம். அக்னிக்கு ஏழு கைகள், இரண்டு தலைகள், மூன்று கால்கள்.
இவரது நாக்கானது தீப்பிழம்பாய் ஏழு பிளவுகளுடன் வெளிப்படுகிறது.

சிவப்பு நிறமான அக்னியின் உடலில் இருந்து ஏழு விதமான ஒளிக்கிரணங்கள் வர்ண ஜாலமாய் வெளிப்படுகின்றன. அக்னியின் வாகனம் ஆடு. அக்னி, பெரும் செல்வந்தன் என்று கருதப்படுகிறான்.

No comments:

Post a Comment