Saturday, September 24, 2016

உலகில் அதிர்ஷ்டசாலி மனிதனைப் பார்க்க ......வேண்டுமென்றால்.........................

உலகில் அதிர்ஷ்டசாலி மனிதனைப் பார்க்க
வேண்டுமென்றால், உங்களை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள்...
உங்கள் மனம் புதிய எண்ணங்கள் என்னும்
வண்ணங்களில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தால், அதை பார்க்கும் துன்ப உள்ளங்களில் கூட மகிழ்ச்சி இன்ப வெள்ளமாய் பொங்கும்..
ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த
தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு
கவரில் உள்ள கடிதத்தை தன்
அம்மாவிடம் மட்டுமே
கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர்
கூறியதாக சொல்லி கொடுத்தான்.
அந்த கடிதத்தை அந்த தாய்
கண்ணீரோடு சத்தமாக தன் மகன்
கேட்கும் படி இப்படி படித்தாள்
"உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன்
எங்கள் பள்ளி மிகவும் சிறியது
அவனுக்கு கற்பிக்க திறமையான
ஆசிரியர்கள் எங்களிடமில்லை
அதனால் தயவுசெய்து நீங்களே
உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது"
என்று
பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின்
தாயாரும் காலமாகிவிட்டார் .
எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த
ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்.....!
இப்படி இருக்கையில் ஒருநாள் தனது
வீட்டின் பழைய சாமான்களை
எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது
அவர் தன் அம்மாவிடம்
முன்பொருமுறை பள்ளியிலிருந்து
கொண்டுவந்து கொடுத்த கடிதம்
எதேச்சையாக கண்ணில் பட அதை
எடுத்து படித்துப்பார்த்தார்......
அதில் இப்படி எழுதியிருந்தது
"மூளை வளர்ச்சி குன்றிய உங்கள்
மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு
நீங்கள் அனுப்பவேண்டாம்" என்று......
"இதைப்படித்த எடிசன் கதறி அழுதார்"
பின் அவரது டைரியில்
கீழ்க்கண்டவாறு எழுதினார்
மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா
எடிசன் தனது "தாயாலேயே"
மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்"
என்று.
தன்பிள்ளைகள் மீதான "உயர்வான
எண்ணங்கள்" அவர்களை மிக
உயரத்துக்கு கொண்டு செல்லும்..!
குழந்தைகள் மனதில்
தன்னம்பிக்கையை விதைப்போம்..
உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும். படியுங்கள்…
சுவாமி விவேகானந்தர் : நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பத்தையே நினைத்து கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை.
சுவாமி விவேகானந்தர் : நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும் துன்பம் ஏன்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : உரசாமல் வைரத்தை பட்டை தீட்டமுடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள். (By experience their life becomes better, not bitter!)
சுவாமி விவேகானந்தர் : அப்போது, சோதனைகள் நன்மைக்கு என்று சொல்கிறீர்களா?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : ஆம். அனுபவத்தை விட பெரிய ஆசிரியர் வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை கொடுத்துவிட்டு பிறகு தான் பாடத்தை போதிக்கும்.
சுவாமி விவேகானந்தர் : கணக்கற்ற பிரச்னைகளில் மூழ்கி தவிப்பதால் நாங்கள் எங்கே போகிறோம் தெரியவில்லை….
இராமகிருஷ்ண பரமஹம்சர் : வெளியே பார்த்தால் எங்கே போகிறோம் என்று உனக்கு புரியாது. உனக்குள்ளே பார். புரியும். கண்களால் பார்க்கத் தான் முடியும். ஆனால் உள்ளத்தால் தான் வழியை காட்ட முடியும். (Eyes provide sight. Heart provides the way.)
சுவாமி விவேகானந்தர் : சரியான பாதையில் போகும்போதும் தோல்வி அடிக்கடி ஏற்படுகிறதே?
பரமஹம்சர் : செல்லும் பாதையில் வெற்றி என்பது பிறரால் அளக்கப்படுவது. ஆனால் அதில் கிடைக்கும் திருப்தி என்பது உன்னால் உன்னால் மட்டுமே உணரப்படுவது.
சுவாமி விவேகானந்தர் : கடினமான சூழ்நிலைகளில் எப்படி நீங்கள் உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?
பரமஹம்சர் : எப்பொழுதும், இனி எப்படி போகப்போகிறோம் என்று அச்சப்படுவதைவிட இதுவரை நீ எப்படி வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார். உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை அல்ல.
சுவாமி விவேகானந்தர் : இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும் விஷயம் எது?
பரமஹம்சர் : துன்பப்படும்போது “எனக்கு ஏன்? என்னை மட்டும் ஏன்??” என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன்.
சுவாமி விவேகானந்தர் : வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை நான் அடைவது எப்படி?
பரமஹம்சர் : உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள். எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை பெற கடைபிடிக்கவேண்டிய நியதி.

சுவாமி விவேகானந்தர் : கடைசியாக ஒரே ஒரு கேள்வி. சில நேரங்களில் என்னுடைய பிரார்த்தனைகளை இறைவன் கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது.
பரமஹம்சர் : கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை. (There are no unanswered prayers!) அச்சத்தை விடு. நம்பிக்கை கொள். வாழ்க்கை என்பது தீர்வு காணப்படவேண்டிய ஒரு புதிர் தானே தவிர பிரச்னை அல்ல. எப்படி வாழவேண்டும் என்று மட்டும் நாம் அறிந்து கொண்டால் வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறிவிடும். என்னை நம்பு.
கடவுளை கடவுள் என நினைப்பவர் வழிபாடு
செய்கின்றார், கடவுளை தந்தை என நினைப்பவர் வழிபாட்டுக்குரியவர் ஆகின்றார்..

No comments:

Post a Comment