Saturday, March 4, 2017

ப்ருஹ்மயக்ஞம்

ப்ருஹ்மயக்ஞம் செய்வோம்.

அந்தணர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் தான் கற்றுக்கொண்ட வேதத்தை தினசரி சிறிதளவாவது சொல்வதற்குத்தான் ப்ருஹ்ம யக்ஞம் என்று பெயர்.

தினசரி காலையில் ஸந்தியாவந்தனம்,ஓளபாசனம் பூஜை முதலிவற்றை முடித்துவிட்டு குரு முகமாக கற்றுக்கொண்ட ஶ்ரீ ருத்ரம், சமகம், புருஷ சூக்தம், ஶ்ரீ ஸூக்தம், துர்கா ஸுக்தம், பாக்கிய ஸூக்தம் போன்ற வேத பாகங்களை சிறிதாவது சொல்ல வேண்டும்., அல்லது காயத்ரியாவது சொல்லலாம்

ஆசனத்தின் மீது அமர்ந்து கொன்டு கிழக்கு முகமாக வலது காலை இடது துடை மேல் போட்டுக்கொன்டு .வேதம் சொல்ல வேண்டும்.

வேதம் கற்றவர்கள் முதல் நாள் முடிவடைந்த பகுதியில் தொடங்கி , தொடர்ந்து அடுத்த நாள் சொல்ல வேண்டும்.. இதற்கு பிறகு தேவர்கள், ரிஷிகள், பித்ருக்களுக்கு ஜலத்தால் தர்பணம் செய்ய வேண்டும்.

இதுவே ப்ருஹ்மயக்ஞம் எனப்படும். தேவ, ரிஷி பித்ரு அருளை மிக சுலபமாக பெற்று தரும் இந்த ப்ருஹ்ம யக்ஞ தர்பணம் தினமும் செய்ய வேண்டும்.

க்ருஷ்ண யஜுர் வேதம் தைத்திரீய ஆரண்யகம் சொல்கிறது: உத்தமம் நாககும் ரோஹதி; உத்தம: ஸமாநானாம் பவதி; யாவந்தகும் ஹவா: அக்ஷய்யஞ்சாபபுநர் ம்ருத்யுஞ் ஜயதி; ப்ருஹ்மண: ஸாயுஜ்யம் கச்சதி என்று.

தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்பவர் இறந்த பின்னர் ஸ்வர்க்கம் செல்வர்;

இவ்வுல்கில் ஜீவித்திருக்கும் வறை தமக்கு சமமானவர்களுக்குள் சிறந்தவராக இருப்பர், செல்வம் நிறைந்த பூமி முழுவதும் தானம் செய்த பலனுக்கு அதிகமாகவே பலன் கிடைக்கும்.; துர் மரணம் வராது; ஸ்வர்க்கத்தை அடைவான்; ப்ருஹ்ம ஸாயுஜ்யம் என்னும் முக்தி அடைவான் என அர்த்தம்.

வேதம் சொல்வது, ப்ருஹ்ம யக்ஞத்தின் முதல் பகுதி... மாத்யானிகம் செய்த பிறகுத்தான் ப்ருஹ்ம யக்ஞ தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்ய வேண்டும். வேதம் சொல்வதை காலையிலும் செய்யலாம். மாத்யானிகம் செய்த பிறகு வேதம் சொல்லி விட்டு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யலாம்

.மாத்யானிகத்திற்கு முன்பு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யக்கூடாது. ப்ருஹ்மசாரி உள்பட அந்தணர் எல்லோரும் தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும். இதனால் மறைந்த முன்னோர்களுக்கு தேவையான ஆஹாரம் கிடைக்கிறது. சந்தோஷ மடைகிறார்கள்.(.யஜுர் வேதம்).

முறையாக நான்கு வேதங்களின் ஆரம்பத்தையும் சொல்லிவிட்டு அதன் முடிவில் தேவ ரிஷி பித்ரு தர்பணம் கரிஷ்யே என்று சொல்லி தர்பணம் செய்கிறோம்.; இவ்விரண்டும் சேர்ந்ததே ப்ருஹ்ம யக்ஞம்.

பித்ருக்கள் என்பவர் பல வகை குழுவாக இருக்கிறார்கள். இவர்களில் நித்ய (திவ்ய) பித்ருக்கள் என்பவர் சிலர். தினசரி ஸ்நானம் செய்த பிறகு குடுமி முடியை முன் பக்கமாக விட்டூக்கொன்ட ஜலம் பூமியில் விழுவதை குடிக்கிறார்கள். வஸ்த்ரம் பிழியும் தண்ணீரையும் குடிக்கிறார்கள்.

ப்ருஹயக்ஞம் பித்ரு தர்பண நீரையும் இவர்கள் தான் சாப்பிடுகிறார்கள்.

அமாவாசை முதலிய நாட்களில் அதிவ்ய பித்ருக்களுக்கு தர்பணம்

செய்கிறோம். தந்தை உள்ள இல்லாத எல்லோரும் பூணல் இடம் போட்டுக்கொண்டு ப்ருஹ்மயக்ஞ தர்பணம் செய்யலாம்.. இதனால் தர்பணம் செய்பவருக்கும் அவரின் பெற்றோருக்கும் ஆயுள் அதிக மாகும்.

ப்ருஹ்மோபதேசம் (பூணல் கல்யானம்) முதல் கடைசி காலம் வரை தினமும் ப்ருஹ்மயக்ஞம் அந்தணர்கள் செய்ய வேண்டும்.

அமாவாசை தர்பணம் செய்த பிறகு ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும். ச்ராத்தம் முடிந்த பிறகு பின்ட பித்ரு தர்பணம் செய்த பிறகு பரேஹணி தர்பணம் செய்த பிறகு ப்ரஹ்மயக்ஞம் செய்ய வேண்டும்.

ப்ருஹ்மயக்ஞத்தில் கூறப்படும் ஸோம பித்ருமான் முதலான பித்ருக்கள் நித்ய பித்ருக்கள் ஆவார்கள். ப்ருஹ்மசாரி உள்பட பெற்றோர்கள் இருப்பவர்களும் தர்பணம் செய்யலாம். ஆசார பூஷணம் பக்கம் 168ல் அபஸவ்யம் த்விஜாக்ர்யாணாம் பித்ர்யே ஸர்வத்ர கீர்த்திதம் ஆப்ரகோஷ்டந்து கர்தவ்யம் மாதாபித்ரோஸ்து ஜீவதோ:

என்ற சாஸ்த்ர வாக்யபடி , தாய் தந்தை யுள்ளவர்கள் ப்ருஹ்ம யக்ஞம் போன்ற கர்மாக்களில் , பித்ருக்களுக்கு தர்பணம் செய்யும்போது , பூணலை இடமாக போட்டுக்கொள்ள வேண்டும்.

ஆனாலும் பூணல் முழங்கைக்கு மேல் போகாமல் இருக்குமாறு இடம் போட்டுக்கொண்டு தர்பணம் செய்ய வேண்டும் தந்தை இல்லாத எல்லோரும் முழுமையாக பூணலை இடம் போட்டுக்கொள்ளலாம்..

No comments:

Post a Comment